/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தடையை திரும்ப பெறக்கோரி மருத்துவ பிரதிநிதிகள் மனு தடையை திரும்ப பெறக்கோரி மருத்துவ பிரதிநிதிகள் மனு
தடையை திரும்ப பெறக்கோரி மருத்துவ பிரதிநிதிகள் மனு
தடையை திரும்ப பெறக்கோரி மருத்துவ பிரதிநிதிகள் மனு
தடையை திரும்ப பெறக்கோரி மருத்துவ பிரதிநிதிகள் மனு
ADDED : ஜூன் 10, 2025 01:25 AM
ஈரோடு, பாரதீய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் மகாசங்க, தேசிய பொதுச் செயலர் ரவி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
மத்திய அரசு மருத்துவமனைகளான இ.எஸ்.ஐ., உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குள் மருத்துவ பிரதிநிதிகள் நுழையவும், விஞ்ஞான, மருந்து குறித்த தகவல்களை பகிர தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவால் மத்திய அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, எங்களுடைய பரிந்துரை, ஆலோசனை, புதிய மருந்துகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.