/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சேலம் ரவுடி கொலையின்போது காயமடைந்தவர் சிறையிலடைப்புசேலம் ரவுடி கொலையின்போது காயமடைந்தவர் சிறையிலடைப்பு
சேலம் ரவுடி கொலையின்போது காயமடைந்தவர் சிறையிலடைப்பு
சேலம் ரவுடி கொலையின்போது காயமடைந்தவர் சிறையிலடைப்பு
சேலம் ரவுடி கொலையின்போது காயமடைந்தவர் சிறையிலடைப்பு
ADDED : மார் 24, 2025 06:43 AM
பவானி: சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான், 30; கடந்த, 19ம் தேதி நசியனுார் அருகே காரில் சென்றபோது கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்போது காரில் தப்பிய கும்பலில் மூன்று பேரை, சித்தோடு போலீசார் சுட்டு பிடித்தனர். அதேசமயம் கொலையாளிகளில் ஒருவரான கார்த்திகேயன், கையில் காயத்துடன் சிக்கினார். நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கையில் காயமடைந்த கார்த்திகேயன் உடல்நிலை தேறியதை தொடர்ந்து, சித்தோடு போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண்-3ல் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொலையாளிகளில் ஒருவருக்கு காலில் அதிக காயம் ஏற்பட்டதால், கால் வெட்டி அகற்றப்பட்டதாகவும் தெரிகிறது.