/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
ADDED : மே 22, 2025 02:16 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம், அந்தியூர், சென்னம்பட்டி முரளி கிழக்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 79. புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பூபதி, 39. பூபதி வீட்டு வளர்ப்பு நாய், சுப்பிரமணியன் புதிதாக கட்டி வரும் வீட்டுக்குள் அடிக்கடி சென்று வந்தது.
இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், தன்னிடம் இருந்த எஸ்.பி.பி.எல்., (ஒற்றை குழல்) துப்பாக்கியால் நாயை சுட்டுள்ளார். இதில் நாய்க்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.பூபதி அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.