/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது
சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது
சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது
சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 01:20 AM
ஈரோடு, கள்ளகுறிச்சி, சங்கராபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 37, மினி ஆட்டோ டிரைவர். பணி நிமித்தமாக ஈரோடுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, 15 வயது சிறுமியின் தாயுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறுமியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சிறுமி மொபைல் போன் எண்ணை பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் போட்டோவை ஆபாசமான முறையில் மார்பிங் செய்து, சமூக வலைதளத்தில் சிறுமிக்கு அனுப்பி உள்ளார். சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர்.
விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் மணிகண்டனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.