/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிராவல் மண் கடத்திய லாரி, ஜே.சி.பி., பறிமுதல் கிராவல் மண் கடத்திய லாரி, ஜே.சி.பி., பறிமுதல்
கிராவல் மண் கடத்திய லாரி, ஜே.சி.பி., பறிமுதல்
கிராவல் மண் கடத்திய லாரி, ஜே.சி.பி., பறிமுதல்
கிராவல் மண் கடத்திய லாரி, ஜே.சி.பி., பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2025 01:45 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் ஓட்டப்பாறை ஊராட்சி, அட்டவணைப்பிடாரியூர் வருவாய் கிராமத்தில், முறையான அனுமதி பெறாமல், கிராவல் மண் எடுப்பதாக கிடைத்த தகவலின்படி, தாசில்தார் ஜெகநாதன், சென்னிமலை வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், வி.ஏ.ஓ., கலைவாணி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், டிப்பர் லாரியில் மண் ஏற்றி செல்லப்படுவது தெரிய வந்தது. லாரி, ஜே.சி.பி., இயந்திரத்தை கைப்பற்றி, சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய லாரி டிரைவர், பொக்லைன் ஆப்பரேட்டரை தேடி வருகின்றனர்.