ADDED : ஜூன் 07, 2025 01:35 AM
* ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 708 கிலோ தேங்காய் வரத்தானது. ஒரே விலையாக (கிலோ), 57 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 43 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 207.29 முதல், 213.79 ரூபாய், இரண்டாம் தரம், 153.67 முதல், 205.09 ரூபாய் வரை, 1.௭௪ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* புளியம்பட்டி பூ சந்தையில், சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ, 700 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, 1,040 ரூபாய்க்கு நேற்று விற்றது. இதேபோல் முல்லை கிலோ, 340 ரூபாய், ஜாதி முல்லை, 600, கோழிக்கொண்டை, 120, சம்பங்கி, 40 ரூபாய்க்கு விற்றது. வைகாசி மாத முகூர்த்த சீசனால் பூக்கள் விலை உயர்ந்தது.
* சத்தி பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,040 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-340, காக்கடா-350, செண்டுமல்லி-70, கோழிகொண்டை-120, ஜாதி முல்லை-600, கனகாம்பரம்-820, சம்பங்கி-40, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த சூரியகாந்தி ஏலத்துக்கு, 21 ஆயிரம் கிலோ விதை வரத்தானது. ஒரு கிலோ, 51.03 ரூபாய் முதல் 60.89 ரூபாய் வரை விற்றது.