ADDED : ஜூன் 03, 2025 01:38 AM
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 17,227 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 50.15 முதல், 65.99 ரூபாய் வரை, 6,040 கிலோ தேங்காய், 3.௫௬ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 179 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 206.39 முதல், 216.59 ரூபாய்; இரண்டாம் தரம், 168.39 முதல், 207.19 ரூபாய் வரை, 7,674 கிலோ கொப்பரை, 14.௯௫ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. எள், 217 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 97.72 முதல், 127.60 ரூபாய்; சிவப்பு ரகம், 9௩ முதல், 13௨ ரூபாய் வரை, 16,259 கிலோ எள், 18 லட்சத்து, 42,197 ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,494 தேங்காய் வரத்தாகி, ஒரு காய், 40-55 ரூபாய்; 28 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 188-212 ரூபாய்; 31 மூட்டை எள் வரத்தாகி கிலோ, 102-117 ரூபாய்; இரண்டு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 64 ரூபாய்; ஒரு மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 52 ரூபாய்க்கும் விற்றது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 94,217 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 40.10 முதல், 64.49 ரூபாய் வரை, 34,941 கிலோ தேங்காய், 20.௧௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.