ADDED : ஜன 05, 2024 10:55 AM
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நேற்று, 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பிலான, 350 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில், 100க்கும் மேற்பட்ட பல்வேறு கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள், கால்நடைகளை வாங்கி சென்றனர்.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 33 ரூபாய், நேந்திரன், 22 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 460, தேன்வாழை, 450, செவ்வாழை, 840, ரஸ்த்தாளி, 510, பச்சைநாடான், 360, ரொபஸ்டா, 310, மொந்தன், 300 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வந்த, 6,090 வாழைத்தார்களும், 8.09 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, அதன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 53 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 62.33 ரூபாய் முதல், 82.30 ரூபாய் வரை, 1,591 கிலோ, 1.௧2 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாழைத்தார் ஏலம் நடந்தது. மொத்தம், 318 வாழைத்தார்கள் வரத்தாகின. செவ்வாழை கிலோ, 41 ரூபாய், நேந்திரம், 17, கதலி, 35, பூவன் தார், 355 ரூபாய், தேன் வாழை தார், 120 ரூபாய்க்கும் விலை போனது.
* ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 14,544 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 22.69 ரூபாய் முதல், 26.69 ரூபாய் வரை விற்றது.
இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, 87 மூட்டைகளில், 2,494 கிலோ வரத்தானது. முதல் தரம் கிலோ, 78.75 ரூபாய் முதல், 87.29 ரூபாய்; இரண்டாம் தரம், 50.90 ரூபாய் முதல், 72.10 ரூபாய் வரை ஏலம் போனது.