/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கால்நடைகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்: வேளாண் அதிகாரிகள் அறிவுரைகால்நடைகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்: வேளாண் அதிகாரிகள் அறிவுரை
கால்நடைகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்: வேளாண் அதிகாரிகள் அறிவுரை
கால்நடைகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்: வேளாண் அதிகாரிகள் அறிவுரை
கால்நடைகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்: வேளாண் அதிகாரிகள் அறிவுரை
ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
கோபி : கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி அழகேசன், கால்நடை அறிவியல் விஞ்ஞானி முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், பராமரிப்பு குறைபாடு, சுகாதாரமின்மை, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கால்நடைகளுக்கு, நுண்ணுயிர், நச்சுயிரி, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி போன்ற நோய் தொற்று ஏற்படுகிறது. இவற்றில் சில கிருமிகள், மனிதர்களையும் தாக்கும் தன்மை கொண்டவை.அடைப்பான் நோய், கன்று வீச்சு நோய், எலி காய்ச்சல், கியூ காய்ச்சல், காசநோய், வெறிநோய் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது. இந்த கால்நடைகளை பராமரிக்கும்போது, பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். பராமரித்த பின், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களை நன்கு காய்ச்சி பயன்படுத்தவும். இறைச்சிகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். நோயால் இறந்த கால்நடைகளை, ஆழமான குழி தோண்டி கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும். கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், தகுந்த பாதுகாப்பு உறைகள் அணிந்து கருசிதைந்த குட்டி, நச்சுக்கொடி, பிறப்பு திரவங்களை அப்புறப்படுத்த வேண்டும். அந்த இடத்தில், சோடியம் குளோரைடு அல்லது பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.