/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மது விலக்கு போலீசார் சோதனையால் ஆச்சர்யம்மது விலக்கு போலீசார் சோதனையால் ஆச்சர்யம்
மது விலக்கு போலீசார் சோதனையால் ஆச்சர்யம்
மது விலக்கு போலீசார் சோதனையால் ஆச்சர்யம்
மது விலக்கு போலீசார் சோதனையால் ஆச்சர்யம்
ADDED : ஜூன் 21, 2024 07:41 AM
ஈரோடு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில், 34க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதன் எதிரொலியாக ஈரோடு மாநகரில் நேற்று முன் தினம் நள்ளிரவில், மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில், சம்பத் நகர் நால்ரோடு, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, மூலப்பட்டறை, வில்லரசம்பட்டி பகுதிகளில் சோதனை நடந்தது.டாஸ்மாக் கடைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் இரவு, 10:00 மணிக்கு பின்னரும் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் இருக்க நேரிட்டது.மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கடத்தல் போன்றவற்றில் பெயர் பெற்ற கரும்புள்ளி கிராமங்களில் சோதனை நடத்தாமல், மாநகரில் கள்ளச்சாராய ரெய்டு நடத்தியதாக, டாஸ்மாக் ஊழியர்கள் ஆச்சர்யம் தெரிவித்தனர்.