/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை' கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'
கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'
கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'
கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'
ADDED : செப் 04, 2025 01:49 AM
சென்னிமலை, சென்னிமலையில், சிறுத்தையின் நடமாட்டம் ட்ரோன் மற்றும் கேமரா பார்வைக்கு சிக்காததால் வனத்துறையினர் சோகத்தில் உள்ளனர்.
சென்னிமலை காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ப்பு நாய், ஆடுகள், கன்றுகள் கொல்லப்படும் சம்பவங்கள் சிறுத்தையால் நடந்து வருகிறது. பொதுமக்கள் அச்சமடைந்து. சிறுத்தையை பிடிக்க கோரி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று மூன்றாவது நாளாக வனத்துறை மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, சென்னிமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ட்ரோன் மூலமாக, 1,000 ஏக்கருக்கு மேல் பறக்க விட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் கேமராவில் சிறுத்தை அகப்படவில்லை. மேலும், 10 இடங்களில் பொருத்தி உள்ள தானியங்கி கேமராவின் பார்வையிலும், சிறுத்தை நடமாட்டம் சிக்கவில்லை என வனத்துறையினர் சோகமடைந்துள்ளனர்.