/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார் ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்
ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்
ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்
ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்
ADDED : ஜூன் 21, 2024 07:39 AM
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆனங்கூர் பகுதியில் கடந்த, 14ம் தேதி இரவு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் அணிந்திருந்த, 5 கிராம் தங்க செயின், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களிடம் தலா ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.
ரயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி அதிகாலை நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ரயில்வே போலீசார் கூறியதாவது: நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சிசிடிவி கேமரா பதிவு கிடைக்கவில்லை. வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை மும்பையில் இருந்து தான் பெற வேண்டும். ஆனங்கூர் பகுதி கேமரா பதிவுகளை பெற்று ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.