/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுபாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 03, 2024 02:48 AM
ஈரோடு:தமிழக
விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் தலைவர் குமாரசாமி தலைமையில்,
ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் ரத்தினசாமி, மாவட்ட செயலாளர்
சுப்பு, உட்பட பலர் பங்கேற்றனர்.
கீழ்பவானியில் பாசனத்துக்கு
ஆக.,15ல் நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி ஆக.,1ம் தேதி காலை,
கலெக்டர் அலுவலகம் முன் மாநில தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்ய
வேண்டும்.
மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் மீதான
பரிசீலனை இல்லை. கூட்டத்தில் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள்
தெரிவிக்கும் விளக்கத்தை, விவசாயிகள் அப்படியே ஏற்குமாறு கலெக்டர்
கூறுகிறார்.
அவரை மாற்றிவிட்டு பிரச்னையை எதிர்கொண்டு தீர்க்கும்
கலெக்டரை நியமிக்க தலைமை செயலரிடம் கோருவது என்பது உள்பட பல்வேறு
தீர்மானம் நிறைவேற்றினர்.