/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி வரும் 7ல் நேர்காணல் ஏற்பாடு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி வரும் 7ல் நேர்காணல் ஏற்பாடு
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி வரும் 7ல் நேர்காணல் ஏற்பாடு
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி வரும் 7ல் நேர்காணல் ஏற்பாடு
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி வரும் 7ல் நேர்காணல் ஏற்பாடு
ADDED : செப் 03, 2025 01:05 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், ஈரோடு அரசு மருத்துவமனை வளாகம், டி.பி.ஹாலில் வரும், 7ம் தேதி காலை, 10:00 மணி முதல் நடக்க உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு, 19 முதல், 30 வயதுக்கு உட்பட்டோருக்கு எழுத்து, மருத்துவ தேர்வு, உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி மற்றும் மனித வளத்துறை நேர்முக தேர்வு நடத்தப்படும்.
தகுதியானோருக்கு, 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி வழங்கி, பணியில் அமர்த்தப்படுவர். ஓட்டுனர் பணிக்கு, 24 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர், ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். தகுதியானோர் கல்வி, ஓட்டுனர் உரிமம், அனுபவ சான்றின் அசல், நகலுடன் பங்கேற்கலாம்.
தேர்வு செய்யப்பட்டோருக்கு, 10 நாட்கள் முழு வகுப்பறை பயிற்சி தரப்படும். கூடுதல் விபரத்துக்கு, 73388 94971, 73977 24813 என்ற எண்ணில் அறியலாம்.