/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிப்காட் ஆலைகளில் நடந்த ஆய்வு அறிக்கை வெளியிட வலியுறுத்தல்சிப்காட் ஆலைகளில் நடந்த ஆய்வு அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
சிப்காட் ஆலைகளில் நடந்த ஆய்வு அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
சிப்காட் ஆலைகளில் நடந்த ஆய்வு அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
சிப்காட் ஆலைகளில் நடந்த ஆய்வு அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
ADDED : ஜன 11, 2024 11:28 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள்
நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட்டில், சட்ட விரோதமாக செயல்படும் சில தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு, காவிரி தண்ணீர் இணைப்பு துண்டித்து மூடுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சட்ட விரோத மாசடைந்த கழிவு நீரை வெளியேற்றிய ஆலை, தனது தவறை திருத்தி கொள்வதற்கு பதில், பசுமை தீர்ப்பாயத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதை கண்டிக்கிறோம். தடை உத்தரவுக்கு எதிராக, மாசுகட்டுப்பாட்டு வாரியமும், அரசும் மேல் முறையீடு செய்து நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலையில் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ள, 3,500க்கும் மேற்பட்ட கேம்ப் கூலி தொழிலாளர்களை உடன் வெளியேற்ற வேண்டும். பெருந்துறை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பதவியில், கூடுதல் பொறுப்பு அதிகாரி உள்ளார். தனி பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தால் கடந்த ஆக., 25ல் மூன்று அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு, இங்குள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, பல தொழிற்சாலைகள் விதி மீறலை நிவர்த்தி செய்ய, மூன்று மாத கால அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, விதி மீறல் சரி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். அதன் பின் அக்., 16ல் தலா மூன்று பேர் கொண்ட, 7 ஆய்வுக்குழு அமைத்து தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர். அந்த குழுக்களின் அறிக்கையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.