/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொப்பரை வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.97க்கு விற்பனைகொப்பரை வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.97க்கு விற்பனை
கொப்பரை வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.97க்கு விற்பனை
கொப்பரை வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.97க்கு விற்பனை
கொப்பரை வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.97க்கு விற்பனை
ADDED : ஜூலை 07, 2024 02:57 AM
ஈரோடு:கொப்பரை தேங்காய் சீசன் காலமாக உள்ளதால், ஒரு கிலோ, 97 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
தமிழகத்தில்
ஈரோடு, திருப்பூர், கோவை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட சில
மாவட்டங்களில் அதிகமாக தேங்காய் விளைச்சலுடன், கொப்பரை தேங்காய்
உற்பத்தியும் காணப்படுகிறது. வழக்கமாக ஜூன் முதல் செப்., இறுதி வரை
கொப்பரை சீசனாகும். இதன்படி நடப்பாண்டிலும் கொப்பரை வரத்து
அதிகரித்து, விற்பனை, விலை உயர்ந்து வருகிறது.
இதுபற்றி
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர்
சுதந்திரராசு கூறியதாவது: கடந்த ஏப்., மாதம் தரமான கொப்பரை, 85
ரூபாய் வரையிலும், பிற காய்கள், 65 முதல், 75 ரூபாய் வரை
விற்பனையானது. தற்போது வரத்து உயர்ந்து, தேவையும்
அதிகரித்துள்ளது. தவிர, தரமான காய் வருவதால், அவற்றை
ஓராண்டுக்குக்கூட இருப்பு வைத்து பயன்படுத்தலாம் என்பதால் பலரும்
முதலீடு செய்கின்றனர். பெருந்துறையில் கடந்த சனிக்கிழமை ஒரு கிலோ,
97.50 ரூபாய்க்கு விலைபோனது.
இனி வரும் நாட்களில் தீபாவளி தேவையை
முன்வைத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும்
வடமாநிலத்தவர்கள் அதிகமாக எண்ணெய் வாங்குவார்கள். எனவே, 100
ரூபாயை கடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.