/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் சுடச்சுட கழுதைப்பால் விற்பனை; 50 மில்லி 200 ரூபாய் கோபியில் சுடச்சுட கழுதைப்பால் விற்பனை; 50 மில்லி 200 ரூபாய்
கோபியில் சுடச்சுட கழுதைப்பால் விற்பனை; 50 மில்லி 200 ரூபாய்
கோபியில் சுடச்சுட கழுதைப்பால் விற்பனை; 50 மில்லி 200 ரூபாய்
கோபியில் சுடச்சுட கழுதைப்பால் விற்பனை; 50 மில்லி 200 ரூபாய்
ADDED : ஜூன் 30, 2025 04:45 AM
கோபி: பெரம்பலுார் மாவட்டம் புன்னம் தாலுகா ஓலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீராளன், 55; இவர் ஊர், ஊராக சென்று கழுதைப்பால் விற்கிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே காசிபாளையத்தில், கழுதையுடன் நேற்று பால் விற்பனையில் ஈடுட்டார். பலர் ஆர்வத்துடன் வாங்கினர்.
இதுகுறித்து சீராளன் கூறியதாவது: கரூர், கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் கழுதைப்பால் விற்பனை செய்துள்ளேன். தற்போது இங்கு வந்துள்ளேன். ஒரு சங்கு கழுதைப்பால், 50 ரூபாய். 50 மில்லி 200 ரூபாய்க்கு விற்கிறோம். அவ்வப்போது பீய்ச்சி தருகிறோம். ஒரு நாளைக்கு ஒரு கழுதை மூலம், 300 மில்லி பால் மட்டுமே கிடைக்கும். குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி, சளி பிடிப்பது, காமாலை நோய் வராது. ஜீரண சக்தி நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் எங்கள் வீடு தேடி வந்து மக்கள் கழுதைப்பால் வாங்கி செல்வார். தற்போது நாங்களே வீடு தேடி வந்து விற்கிறோம். ஆறு மாத குழந்தை முதல் ஐந்து வயது குழந்தைகள் வரை கழுதைப்பால் கொடுக்கலாம். இத்தொழிலை பாரம்பரியாக செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.