/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம் ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்
ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்
ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்
ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்
ADDED : ஜூன் 16, 2025 03:42 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்வே காலனி பகு-தியில் சேகரமாகும் குப்பையை, தினமும் ரயில்வே ஸ்டேஷன் அருகே கொண்டு வந்து ஒருங்கிணைத்து கிடங்குக்கு குப்பை கொண்டு செல்லப்படுவது வழக்கம். கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக சேகரமான குப்பையை, ரயில்வே காலனி பகுதியில் குவிந்துள்ளது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே தான் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் தொழிலாளர், ஊழியர், பார்சல் அனுப்புவோர், பெறுவோர் என நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இது தவிர ஓய்வூதியர், மேல்நிலை தொட்டி பராமரிப்பு பணியில் ஈடுப-டுவோர் வந்து செல்கின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக குப்பையை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.