/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.24 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் மாவட்டத்தில் 438 கடைகள் மூடல்ரூ.24 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் மாவட்டத்தில் 438 கடைகள் மூடல்
ரூ.24 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் மாவட்டத்தில் 438 கடைகள் மூடல்
ரூ.24 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் மாவட்டத்தில் 438 கடைகள் மூடல்
ரூ.24 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் மாவட்டத்தில் 438 கடைகள் மூடல்
ADDED : ஜூன் 28, 2024 01:09 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில், 16 பேர் கொண்ட குழுவினர், போலீசாருடன் இணைந்து, மாவட்டம் முழுவதும் கடந்த, 6 மாதங்களில், 5,181 கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில், 438 கடைகளில் தடை செய்யப்பட்ட, 24 லட்சத்து, 17,630 ரூபாய் மதிப்பிலான, 2,822 கிலோ புகையிலை பொருட்களை கண்டறிந்து, 1,905 கிலோ புகையிலை பொருட்களை அழித்துள்ளனர். எஞ்சிய புகையிலை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 438 கடைகளின் விற்பனையாளர்களுக்கு, 69.௮௫ லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம், புகையிலை பொருள் விற்பனை குறித்து, 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
புகையிலை பொருள் முதன்முறையாக விற்றால், 25,000 ரூபாய் அபராதம், 15 நாட்கள் கடை மூடப்படும். இரண்டாவது முறை கண்டறிந்தால், 50,000 ரூபாய் அபராதம், ஒரு மாதம் கடை மூடப்படும். மூன்றாவது முறை கண்டறிந்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம், 90 நாள் கடை மூடப்படும். தொடர்ந்து விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்று ரத்து செய்யப்பட்டு கடை நிரந்தரமாக மூடப்படும். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்றும், உணவு பாதுகாப்பு துறை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மாநகரில் பறிமுதல்
ஈரோட்டில், காய்கறி மார்க்கெட் பின்புறமுள்ள மாதவ கிருஷ்ணா வீதியில், உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், கடைகளில் புகையிலை பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர். சீதாராம் என்பவர் கடையில், 2 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடையை பூட்டினர்.
அருகிலுள்ள பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடைகளில், ஒரு மூட்டை அளவுக்கு சிகரெட், பீடி, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சோதனையில் ஐந்து கடைகளுக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.