/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு சைவ மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாஈரோடு சைவ மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ஈரோடு சைவ மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ஈரோடு சைவ மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ஈரோடு சைவ மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED : ஜன 04, 2024 11:05 AM
ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு மாரியம்மன் கோவிலில், நேற்று நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து, நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ஈரோடு, வெட்டுகாட்டு வலசில் பிரசித்தி பெற்ற சைவ மாரியம்மன் கோவில் உள்ளது.
நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 26ம் தேதி
பூச்சாட்டு, கம்பம் நடுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது. கோவில் பூசாரி பூங்கர கத்துடன் குண்டம்
இறங்கினார்.
தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, தீ மிதித்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தனர்.
மேலும், அலகு குத்தியும், அக்னி கும்பம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி, மாலை சுவாமி திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது.
நாளை மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.