/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலை நசுக்கும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள்'பேட்டியா' பொதுக்குழுவில் கண்டனம் தொழிலை நசுக்கும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள்'பேட்டியா' பொதுக்குழுவில் கண்டனம்
தொழிலை நசுக்கும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள்'பேட்டியா' பொதுக்குழுவில் கண்டனம்
தொழிலை நசுக்கும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள்'பேட்டியா' பொதுக்குழுவில் கண்டனம்
தொழிலை நசுக்கும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள்'பேட்டியா' பொதுக்குழுவில் கண்டனம்
ADDED : செப் 01, 2025 01:35 AM
ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பொது செயலாளர் ரவிச்சந்திரன் அறிக்கை படித்தார். பொருளாளர் முருகானந்தம் ஆண்டறிக்கையை படித்தார்.
தங்கத்தை போன்று ஜவுளி துறைக்கும் ஜி.எஸ்.டி.யை ஐந்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைக்க வேண்டும். அரிசி போன்ற தானிய வகைகள், 25 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் ஜி.எஸ்.டி. இல்லை. 25 கிலோவுக்கு குறைந்தால் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும். தவிட்டுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தொழில் நிறுவனங்களில் தொந்தரவு செய்வதில்லை.
ஆனால் மாநில அரசு ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தொழிலை நசுக்குகின்றனர். இந்நிலை நீடித்தால் அனைத்து சங்கமும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பழைய வழக்குகள் அனைத்தையும் சமரசமாக தீர்க்க ஒருமுறை தீர்வு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.