ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
டி.என்.பாளையம் டி.என்.பாளையம் ஒன்றியம் கொங்கர்பாளையம், அக்கரைகொடிவேரி, கணக்கம்பாளையம் கொண்டையம் பாளையம், புஞ்சை துறையம் பாளையம் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில், சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கொங்கர்பாளையம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு, அவசர அவசரமாக, 15 நிமிடத்தில் கூட்டத்தை நிறைவு செய்தனர். பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று, குற்றச்சாட்டு எழுந்துள்-ளது.