ADDED : ஜூன் 27, 2025 01:07 AM
ஈரோடு,ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலர் வெங்கிடு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரியில் அலுவலக உதவியாளராக பணி செய்யும் முத்துமாரி என்பவரை, முதல்வர் நாகநாதனின் துாண்டுதலின் பேரில், தற்காலிக காவலர் பழனியப்பன் தாக்கியுள்ளார். இதுபற்றி புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் நடவடிக்கை இல்லை.
புகார் வழங்கியவரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் வெண்ணிலா மீதும், முதல்வர் நாகநாதன், காவலர் பழனியப்பன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, மாநில துணை தலைவர் சாமிகுணம், குருநாதன், ரங்கசாமி, மணி, உஷாராணி, செந்தாமலர் உட்பட பலர் பேசினர்.