/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காஞ்சிகோவில் அருகே விபத்து கோபி அரசு பஸ் டிரைவர் பலிகாஞ்சிகோவில் அருகே விபத்து கோபி அரசு பஸ் டிரைவர் பலி
காஞ்சிகோவில் அருகே விபத்து கோபி அரசு பஸ் டிரைவர் பலி
காஞ்சிகோவில் அருகே விபத்து கோபி அரசு பஸ் டிரைவர் பலி
காஞ்சிகோவில் அருகே விபத்து கோபி அரசு பஸ் டிரைவர் பலி
ADDED : ஜூன் 18, 2025 01:16 AM
பெருந்துறை, கோபி, பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்தவர் ராமு, 43; கோபி அரசு போக்குவரத்து கிளை டிரைவர். கோபி கிளை அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் இருந்தார். இவர் மனைவி கயல்விழி, 32; கம்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஈரோட்டில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம் முடிந்து புல்லட்டில் கோபிக்கு புறப்பட்டார். காஞ்சிக்கோவில்-கவுந்தப்பாடி ரோடு, கருமாண்டியூர், தம்பி கலையான் கோவில் ஆர்ச் அருகில் சென்றபோது எதிரே வந்த ஈச்சர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்தில் ராமு பலியானார்.
லாரி டிரைவரான சித்தோடு, காங்காபுரம், மேட்டையன் காட்டை சேர்ந்த கபிலன், 23, மீது, காஞ்சிகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.