ADDED : செப் 17, 2025 01:36 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 55; நேற்று முன்தினம் இரவில் தோட்டத்தில் புகுந்த நாய்கள் ஆடுகளை விரட்டி கடித்துள்ளன. இதில் ஒரு ஆடு பலியானது. ஒரு ஆடு பலத்த காயமடைந்தது.
ஆடுகளின் சத்தம் கேட்டு, கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தெருநாய்களை விரட்டியடித்தனர். இங்குள்ள டாஸ்மாக் கடை எதிரில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். அதை தின்பதற்காக, 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் எந்நேரமும் சுற்றி திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும் அவ்வப்போது கூட்டமாக புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றன என்பதும், அப்பகுதிவாசிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.