/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பங்களாபுதுார் அருகே இரவில் சிறுத்தை தாக்கி தப்பித்த ஆடு பங்களாபுதுார் அருகே இரவில் சிறுத்தை தாக்கி தப்பித்த ஆடு
பங்களாபுதுார் அருகே இரவில் சிறுத்தை தாக்கி தப்பித்த ஆடு
பங்களாபுதுார் அருகே இரவில் சிறுத்தை தாக்கி தப்பித்த ஆடு
பங்களாபுதுார் அருகே இரவில் சிறுத்தை தாக்கி தப்பித்த ஆடு
ADDED : ஜூன் 21, 2025 01:01 AM
டி.என்.பாளையம், பங்களாபுதுாரை அடுத்த வினோபா நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் செல்வம், 55; தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், ஆடுகள் சத்தமிடுவதை கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை ஒரு ஆட்டை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
அவர் சத்தமிடவே சிறுத்தை ஓட்டம் பிடித்துள்ளது.சில நாட்களுக்கு முன் வினோபா நகரில் இரண்டு விவசாயிகளுக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை, சிறுத்தை கொன்ற நிலையில், மீண்டும் இரை தேட வந்துள்ளது. குண்டேரிப்பள்ளம் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.