/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'விளைநிலம் பாதிக்காமல் காஸ் பைப்லைன் பணி''விளைநிலம் பாதிக்காமல் காஸ் பைப்லைன் பணி'
'விளைநிலம் பாதிக்காமல் காஸ் பைப்லைன் பணி'
'விளைநிலம் பாதிக்காமல் காஸ் பைப்லைன் பணி'
'விளைநிலம் பாதிக்காமல் காஸ் பைப்லைன் பணி'
ADDED : ஜன 11, 2024 11:29 AM
ஈரோடு: ''பெங்களூரு - கோவை இடையே காஸ் பைப் லைன் அமைக்கப்படுகிறது. விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் பைப்லைன் கொண்டு செல்லும் பணி நடக்கிறது,'' என, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இதுகுறித்து, ஈரோட்டில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் உள்ள, 1,045 குளங்களில், இன்னும் சிலவற்றில் வேலை முடியாமல் உள்ளது. தண்ணீர் பற்றாக்
குறையால் பணி தடைபட்டது. தற்போது கிடைப்பதால் பணி தொடங்கி அனைத்து குளத்துக்கும் தண்ணீர் செல்கிறதா என்பதை உறுதி செய்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், 80 சதவீத பணி முடிந்தது என கூறுவது தவறு. தண்ணீர் எங்கு எடுக்க வேண்டுமோ, அப்பகுதியில் இருந்து, 3 பம்பிங் ஸ்டேஷன் வரையான இடங்களில் நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை. பைப்லைன் போடவில்லை. அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறதா என உறுதிப்படுத்தி, முதல்வரிடம் நாள் பெற்று திறக்கப்படும்.
பெங்களூரு - கோவை இடையே காஸ் பைப் லைன் அமைக்கப்படுகிறது. விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் பைப்லைன் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. எங்காவது ஓரிரு இடத்தில் நடந்தால் கூட அதையும் தனி கவனம் செலுத்தி மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 27 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைக்க உள்ளது. இதில் நம் மாவட்டத்துக்கும் பல்வேறு தொழில்கள் வர உள்ளன. இந்த முதலீட்டை கவர்ந்து இழுத்தது முதல்வர் ஸ்டாலின். அதில் மத்திய அரசு பெருமை தேடி கொண்டால், நாங்கள் ஏதும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.