/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா வியாபாரிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் கஞ்சா வியாபாரிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கஞ்சா வியாபாரிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கஞ்சா வியாபாரிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கஞ்சா வியாபாரிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ADDED : செப் 17, 2025 01:32 AM
ஈரோடு, ஈரோடு சூரம்பட்டியில் கஞ்சா விற்றதாக, சூரம்பட்டி வலசு செல்வராஜ் மகன் சசிகுமார், 25; சேகர் மகன் தினேஷ், 28, ஆகியோரை, சூரம்பட்டி போலீசார் கடந்த மாதம் கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்.பி., மூலம் ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.
கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இருவரும் கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
இருவர் மீதும் அடிதடி, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.