Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில்் 7ம் தேதி இலவச மருத்துவ முகாம்

கோபியில்் 7ம் தேதி இலவச மருத்துவ முகாம்

கோபியில்் 7ம் தேதி இலவச மருத்துவ முகாம்

கோபியில்் 7ம் தேதி இலவச மருத்துவ முகாம்

ADDED : செப் 05, 2025 01:09 AM


Google News
ஈரோடு, கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம், வரும், 7ம் தேதி கோபியில் மொடச்சூர் சாலையில் உள்ள கே.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை (பாப்ஸ்மியர்) மற்றும் மார்பக பரிசோதனை (மேமோகிராம்) ஆகிய பரிசோதனை, மருத்துவரின் பரிந்துரைப்படி இலவசமாக செய்யப்படும்.

மார்பகத்தில் கட்டி, மார்பகத்தில் வலி, நாள்பட்ட மாதவிடாய் தொந்தரவு, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் (மலச்சிக்கல்/வயிற்றுப்போக்கு), மலத்தில் ரத்தம், பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது வலி, கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய், அடிவயிற்றில் கட்டி, குரலில் திடீர் மாற்றம், திடீர் எடை குறைவு, ஆறாத வாய்ப்புண், கழுத்தில் வீக்கம்/கட்டி போன்ற பிரச்னை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்வோருக்கு மருத்துவர் பரிந்துரைக்கப்படும் இதர பரிசோதனை மற்றும் சிகிச்சை, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். முகாமுக்கு வருவோர் பழைய மருத்துவ பதிவு எக்ஸ்-ரே, ஸ்கேன் மற்றும் மருந்து சீட்டுகளை எடுத்து வர வேண்டும். விபரங்களுக்கு, 73393- 33485 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us