/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீவனப்புல் நறுக்கும் கருவிகள் 350 பேருக்கு வழங்க ஏற்பாடு தீவனப்புல் நறுக்கும் கருவிகள் 350 பேருக்கு வழங்க ஏற்பாடு
தீவனப்புல் நறுக்கும் கருவிகள் 350 பேருக்கு வழங்க ஏற்பாடு
தீவனப்புல் நறுக்கும் கருவிகள் 350 பேருக்கு வழங்க ஏற்பாடு
தீவனப்புல் நறுக்கும் கருவிகள் 350 பேருக்கு வழங்க ஏற்பாடு
ADDED : செப் 07, 2025 12:55 AM
ஈரோடு :தமிழகத்தில் கால்நடை தீவன விரயம் குறைக்க, கால்நடைகளின் செரிமானம் அதிகரிக்க, உற்பத்தி திறனை பெருக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 350 விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்படுகிறது.
இக்கருவி பெற குறைந்தது, 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் மின்சார வசதியுடன், தீவனம் பயிரிடப்பட்டுள்ள, 2 பசு அல்லது எருமைகளுக்கு உரிமையாளராக இருக்கும் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகள், அருகே உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம். சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், சிறுகுறு விவசாயிகளுக்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.