ADDED : ஜூன் 22, 2024 01:12 AM
ஈரோடு : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் துவக்கி வைத்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், பிற அமைப்பு நிர்வாகிகள் சீனிவாசன், விஜயன் கோரிக்கை குறித்து பேசினர்.
காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே செயல்படுத்த வேண்டும். சத்துணவுக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.