Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொங்கு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

கொங்கு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

கொங்கு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்


ADDED : ஜூன் 21, 2025 01:20 AM

Follow on Google

ADDED : ஜூன் 21, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். முதல்வர் ராகவேந்திரன் வரவேற்றார். கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் நாராயணந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களின் கல்வி, ஆன்மிகம் மற்றும் வருங்காலத்தில் வாழ்க்கை முறை எவ்வாறு நடத்த வேண்டும் என பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் கிருஷ்ணன், உறுப்பினர் பழனிச்சாமி, கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு நேசனல் பள்ளி தாளாளர் தேவராஜா பேசினர். கடந்த, 2025 ஏப்., வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 13 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதலாமாண்டில் சேர்ந்த மாணவர்களை, வாரியத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை, கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் வாழ்த்தினர். கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap