/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காமதேனு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம் காமதேனு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
காமதேனு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
காமதேனு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
காமதேனு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 01:04 AM
ஈரோடு, சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் அருந்ததி, இணை செயலர் மலர்செல்வி, புல முதன்மையர் நிர்மலா முன்னிலை வகித்தனர்.
கல்வியாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகநாதன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் 'ஒரு மாணவனின் வாழ்வில் மாதா, பிதா மற்றும் குரு ஒழுக்கத்தின் குருக்கள். கல்வி என்பது வெறும் புத்தக அறிவல்ல; வாழ்வை மாற்றும் சக்தி' என்றார். முன்னதாக முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார். கணிதத்துறை தலைவர் சக்தி நன்றி கூறினார்.