/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் முதல் போக நெல் நடவுப்பணி துவக்கம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் முதல் போக நெல் நடவுப்பணி துவக்கம்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் முதல் போக நெல் நடவுப்பணி துவக்கம்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் முதல் போக நெல் நடவுப்பணி துவக்கம்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் முதல் போக நெல் நடவுப்பணி துவக்கம்
ADDED : ஜூன் 23, 2025 05:32 AM
கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில், முதல் போக சாகுபடியாக, நெல் நடவுப்பணி துவங்கியுள்ளது.
கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த மே, 26ல் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து இரு பாசனங்களிலும், டி.பி.எஸ்., -5 மற்றும் ஏ.எஸ்.டி., 16 ரக விதை நெல்லை, விவசாயிகள் நாற்றாங்களில் விதைத்துள்ளனர்.
இந்நிலையில் இரு பாசனங்களிலும் நேற்று முன்தினம் முதல், விவசாயிகள் நடவுப்பணியை துவக்கியுள்ளனர். குறிப்பாக காசிபாளையம், செங்கலரை, கரட்டடிபாளையம், நஞ்சகவுண்டம்பாளையம், பங்களாப்புதுார், ஏளூர், கள்ளிப்பட்டி பகுதிகளில் நடவுப்பணி தீவிரமாகியுள்ளது. பவர் டில்லர் மூலம், ஏக்கருக்கு 5,500 ரூபாய் வாடகையில் மூன்று உழவு செய்துள்ளனர். அதன்பின் குத்தகை அடிப்படையில் ஏக்கருக்கு, 6,000 ரூபாய் செலவில், 20 பெண் பணியாளர்கள், வயலில் நடவுப்பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


