/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிவன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
ADDED : மார் 24, 2025 06:43 AM
பு.புளியம்பட்டி: பவானிசாகர் வனச்சரக வனப்பகுதியில், யானை, புள்ளி மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. தற்போது கோடை வெயில் அதிகரித்து வனங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் போதிய குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பவானிசாகர் வனச்சரக காப்பு காடுகளில், விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக, லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, அங்குள்ள தொட்டிகளில் வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர்.
கொத்தமங்கலம் மற்றும் புதுபீர்க்கடவு பீட், வரட்டுக்கோம்பை உள்ளிட்ட காப்பு காடு தொட்டிகளில், நேற்று தண்ணீர் நிரப்பப்பட்டது. இதுகுறித்து பவானிசாகர் ரேஞ்சர் சதாம் உசேன் கூறுகையில், 'மழை பெய்யும் வரை, வாரத்துக்கு இரண்டு முறை லாரிகள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் விடப்படும்' என்றார்.