ADDED : பிப் 24, 2024 03:30 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் துவங்குதல் மற்றும் மேம்பாட்டுக்கான ஒரு நாள் சிறப்பு கடன் வசதி முகாம், ஈரோட்டில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்தார்.
இதில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில், 75 பேருக்கு, 37.80 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி ஒப்பளிப்பு மற்றும் கடனுதவிக்கான ஆணைகளை டி.ஆர்.ஓ., வழங்கினார். தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயன் பெற்ற, 32 பயனாளிகளுக்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான மானியத்தை வழங்கினர்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிகண்டன், தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், சிட்கோ மாவட்ட மேலாளர் சர்மிளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், சுஸ்மிதா, ஈடிசியா தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.