/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இ.பி.எஸ்., காங்கேயம் வருகை:அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை இ.பி.எஸ்., காங்கேயம் வருகை:அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
இ.பி.எஸ்., காங்கேயம் வருகை:அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
இ.பி.எஸ்., காங்கேயம் வருகை:அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
இ.பி.எஸ்., காங்கேயம் வருகை:அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
ADDED : செப் 02, 2025 01:23 AM
காங்கேயம்;அதிமுக பொது செயலாளர் இ.பி.எஸ்., காங்கேயத்துக்கு, 11ம் தேதி வருகிறார். இதுகுறித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது. காங்கேயம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நடராஜ், நகர செயலாளர் வெங்குமணிமாறன் தலைமை வகித்தனர்.
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். வலுவான இந்தியா அமைய, எப்படி மோடி உள்ளாரோ, அதேபோல் தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி வழங்க, முதலமைச்சராக இ.பி.எஸ்.,சை அமர வைக்க வேண்டும் என்று பேசினார். இபிஎஸ் பங்கேற்கும் கூட்டத்தில், 60 ஆயிரம் பேரை அழைத்து வரவும் முடிவு செய்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.