/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
ஈரோடு: ஈரோடு, ஈ.வி.என்., சாலை மேற்பார்வை பொறியாளர் அலுவ-லகம் முன், தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மண்டல தலைவர் வடிவேல் தலைமை வகித்தார்.
மண்டல செய-லாளர் மகேந்திரன், மண்டல பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மின்வாரியத்தில், 63,000 காலி பணியிடங்கள் உள்ள நிலையில், மின்வாரிய அனைத்து பணிளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். குடும்பத்தை பிரிந்து, 400, 500 கி.மீ., துாரத்தில் பணியமர்த்தப்பட்டு கடும் பணிச்சுமையிலும், மன அழுத்தத்திலும் பணி செய்யும் கேங்மேன்களை, சொந்த ஊருக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, மின்சார வாரிய நிர்வாக்குழு அனுமதி வழங்கியும் பணி அமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள, 5,493 கேங்மேன்களுக்கும் உடன் பணி ஆணை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.