/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஸ் ஸ்டாண்டில் விபத்து பஸ் ஏறியதில் மூதாட்டி சாவு பஸ் ஸ்டாண்டில் விபத்து பஸ் ஏறியதில் மூதாட்டி சாவு
பஸ் ஸ்டாண்டில் விபத்து பஸ் ஏறியதில் மூதாட்டி சாவு
பஸ் ஸ்டாண்டில் விபத்து பஸ் ஏறியதில் மூதாட்டி சாவு
பஸ் ஸ்டாண்டில் விபத்து பஸ் ஏறியதில் மூதாட்டி சாவு
ADDED : அக் 04, 2025 12:58 AM
புன்செய்புளியம்பட்டி, திருப்பூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில், மாலை, 5:௦௦ மணியளவில், பயணிகளை இறக்கி விட்டு, டிரைவர் வடிவேல் கிளப்பினார்.
அப்போது பஸ் வலது புறமாக நடந்து சென்ற செலம்பர கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சுப்பாள், 60, மீது உரசியதில் கீழே விழுந்தார். பஸ்சின் பின் சக்கரம் அவரது இடது தோள்பட்டை மீது ஏறியதில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


