மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி பலி
மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி பலி
மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி பலி
ADDED : செப் 11, 2025 01:35 AM
பவானி :பவானி நகராட்சி சார்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பவானியில் நேற்று நடந்தது. முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளிக்க, மனைவியுடன் முதியவர் ஒருவர் வந்திருந்தார்.
நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விசாரணையில் பவானி வர்ணபுரம் சுப்பிரமணி, 72, என்பது தெரிந்தது. மனைவி பூங்கொடி, 65; மூன்று மகள்கள் உள்ளனர்.