/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு
நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு
நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு
நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு
ADDED : மே 22, 2025 01:41 AM
ஈரோடு,சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் இறந்தார். கொடுமுடி, வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டு புதுாரை சேர்ந்தவர் சாமியப்பன், 70. கடந்த, 14 இரவு 7:00 மணிக்கு கரூர் மெயின் ரோடு நடுப்பாளையத்தில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த டூவீலர், இவர் மீது மோதி நிற்காமல் சென்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 20ல் இறந்தார். விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் டூவீலரில் சென்றவர் யார் என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.