ADDED : செப் 11, 2025 01:49 AM
காங்கேயம் :திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில், ௩3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 15,516 கோடி புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின், ௫0 சதவீத வரி விதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளான திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டு கொள்ளாத பா.ஜ., அரசுக்கு எதிராக நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்த மக்கள், தி.மு.க., நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., முப்பெரும் விழாவில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.