/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : மே 24, 2025 01:11 AM
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரீத் பாரத் திட்டத்தில், 38 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதில் ஸ்டேஷனுஷக்குள் ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் நேற்று ஆய்வு செய்தார். நடை மேம்பாலத்தின் கட்டுமான பணியின் தற்போதைய நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதி, டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திர செயல்பாடு, பயணிகள் பொருட்கள் இருப்பு வைக்கும் அறை, பயணிகளுக்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருக்கும் அறையை ஆய்வு செய்தார். 'பழைய ரயில்வே குடியிருப்புகளில் சட்ட விரோத செயல் நடப்பது' குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.