/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 45வது பொது பேரவை கூட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 45வது பொது பேரவை கூட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 45வது பொது பேரவை கூட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 45வது பொது பேரவை கூட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 45வது பொது பேரவை கூட்டம்
ADDED : செப் 11, 2025 01:51 AM
ஈரோடு, :ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 45வது பொது பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாஜலம் துவக்கி வைத்தனர்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் குமார், தலைமை உரையாற்றினார். வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.
2024--25ம் ஆண்டில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 1,13,989 விவசாயிகளுக்கு, 1,524 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் மற்றும் 2,646 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 145.06 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வங்கி, 9.32 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது என்றார்.
விழாவில் ஈரோடு மேயர் நாகரத்தினம் சிறப்புரையாற்றினார். ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா, திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு மற்றும் ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் செல்வக்குமரன் முன்னிலை உரை ஆற்றினர். வங்கி பொது மேலாளர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.