/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஜாதிச்சான்று வழங்க கோரி கோபியில் ஆர்ப்பாட்டம்ஜாதிச்சான்று வழங்க கோரி கோபியில் ஆர்ப்பாட்டம்
ஜாதிச்சான்று வழங்க கோரி கோபியில் ஆர்ப்பாட்டம்
ஜாதிச்சான்று வழங்க கோரி கோபியில் ஆர்ப்பாட்டம்
ஜாதிச்சான்று வழங்க கோரி கோபியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:42 AM
கோபி:அனைத்து
பழங்குடி மக்களுக்கும் ஜாதிச்சான்று வழங்க கோரியும், ஈரோடு மாவட்ட
மலையாளி இனமக்களை, பழங்குடி பட்டியலில் சேர்த்திட கோரியும்,
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கோபி ஆர்.டி.ஓ., அலுவலகம்
முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்தி நிர்வாகி தங்கவேல் தலைமை
வகித்தார். விவசாயிகள் சங்கம் மாநில நிர்வாகி துரைராஜ் பேசினார்.
அனைத்து பழங்குடியின மக்களுக்கும் ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்.
2006 வன உரிமை சட்டத்தின் படி, அனுபவ நிலங்களுக்கு மனுச்செய்த
அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா
இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கையை வலியுறுத்தினர்