/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்
நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்
நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்
நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 20, 2025 02:00 AM
பவானி, பவானி நகராட்சி, 12வது வார்டு தேவபுரம் பகுதியில் உள்ள மயானத்தில், நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டு பகுதி சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. கடந்த வாரம் பணி தொடங்கப்பட்ட நிலையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலரான அ.தி.மு.க.,வை சேர்ந்த தங்கமணி தலைமையில், நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மக்களிடம் கருத்து கேட்காமல், மயானத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கலாமா? என்று கூறி, நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.


