மக்களின் எதிர்ப்பால் கழிப்பறை இடிப்பு
மக்களின் எதிர்ப்பால் கழிப்பறை இடிப்பு
மக்களின் எதிர்ப்பால் கழிப்பறை இடிப்பு
ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி, 20வது வார்டு குமலன்குட்டையில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் சேதமடைந்த கழிப்பறை இருந்தது. இந்நிலையில் புதிய நவீன கழிப்பறை கட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பழைய கழிப்பறை கட்டடத்தை இடிக்காமல், புதிய கழிப்பறை கட்டும் பணியை, ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு புகாரளித்தனர்.இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கழிப்பறையை இடித்து விட்டு, புதிய நவீன கழிப்பறை கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சேதமடைந்த பழைய கழிப்பறை இடித்து அகற்றப்பட்டு, புதிய கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.