Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மலை கரட்டை ஆக்கிரமித்த குடிசைகள் அகற்றம் தனி மனிதனுக்கு காப்பு; கை கொடுத்த கரங்கள்?

மலை கரட்டை ஆக்கிரமித்த குடிசைகள் அகற்றம் தனி மனிதனுக்கு காப்பு; கை கொடுத்த கரங்கள்?

மலை கரட்டை ஆக்கிரமித்த குடிசைகள் அகற்றம் தனி மனிதனுக்கு காப்பு; கை கொடுத்த கரங்கள்?

மலை கரட்டை ஆக்கிரமித்த குடிசைகள் அகற்றம் தனி மனிதனுக்கு காப்பு; கை கொடுத்த கரங்கள்?

ADDED : ஜூன் 14, 2024 12:51 AM


Google News


பவானி, குறிச்சி மலைக்கரட்டை ஆக்கிரமித்து போடப்பட்ட மெட்டல் சாலை, குடிசைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர். அதேசமயம் இதற்கு துணைபோன பல்வேறு துறைஅதிகாரிகள் தப்பி விட்டதாக, மக்கள் வேதனை தெரிவித்தனர்.

அம்மாபேட்டை அருகே குறிச்சியில் மலைக்கரடு உள்ளது. இங்கு அந்தியூர், பச்சம்பாளையத்தை சேர்ந்த மோகன், 47, இரண்டரை ஏக்கர் பரப்பிலான மரங்களை வெட்டி அகற்றி, 30க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைத்தார். குடிசைகள் அமைக்கப்பட்ட பகுதிக்கு செல்ல, அரை கிலோ மீட்டர் துாரத்துக்கு, 25 அடி அகலத்தில் மெட்டல் ரோடும் போட்டார்.

இதுகுறித்து அப்பகுதி தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் கந்தசாமி, 80, கேட்டபோது அவரை தாக்கினார். இது தொடர்பான புகாரில் அம்மாபேட்டை போலீசார் மோகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குறிச்சி மலை கரட்டில் அத்துமீறி போட்ட குடிசைகள், சாலையை, பவானி தாசில்தார் தியாகராஜன் தலைமையிலான வருவாய் துறையினர் முழுவதும் அகற்றினர்.மொத்தம், 30க்கும் மேற்பட்ட குடிசை, மூன்று வீதிகளாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, குழாய் இணைப்பு, சோலார் பேனல் அகற்றப்பட்டதாக, வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.

நுாற்றுக்கணக்கான கரங்களை மறைமுகமாக கொண்டு, தனி ஒரு மனிதனாக மலைக்கரட்டை ஆக்கிரமித்து, மெட்டல் சாலை போட்டு, குடிசைகள் அமைத்த சம்பவத்தில், தனி மனிதன் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள் தப்பி விட்டதாக, அப்பகுதி மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us