/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவகிரி தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளிடம் தாமதமாகும் கஸ்டடி விசாரணையால் சந்தேகம் சிவகிரி தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளிடம் தாமதமாகும் கஸ்டடி விசாரணையால் சந்தேகம்
சிவகிரி தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளிடம் தாமதமாகும் கஸ்டடி விசாரணையால் சந்தேகம்
சிவகிரி தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளிடம் தாமதமாகும் கஸ்டடி விசாரணையால் சந்தேகம்
சிவகிரி தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளிடம் தாமதமாகும் கஸ்டடி விசாரணையால் சந்தேகம்
ADDED : ஜூன் 09, 2025 04:45 AM
ஈரோடு: சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை, கஸ்டடி எடுத்து விசாரிப்பதில், ஈரோடு மாவட்ட போலீசார் செய்யும் தாமதம், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி, விளக்கேத்தி, உச்சிமேடு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த வயதான தம்பதி ராமசாமி-பாக்கியம், கடந்த மாதம் ஏப்.,28ல் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் திருட்டு நகையை வாங்கிய, சென்னி
மலையை சேர்ந்த நகை கடைக்காரர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரும், எழுமாத்துார் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் கடந்த, 2ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 6ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 6ல் ஆஜர்படுத்தப்பட, 13ல் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூவரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தமிழக முதல்வர் பெருந்துறைக்கு, 11ம் தேதி வருகிறார். இதற்கான பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன. இதனால் தற்போது கஸ்டடி எடுக்கவில்லை.
மாறாக, 13ல் மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக கஸ்டடி எடுக்க, போலீசார் சார்பில் மனு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த நாளிலும், நீதிமன்றத்தில் மனு செய்யப்படுவது உறுதியாக கூற முடியாது. இவ்வாறு கூறினர்.
ஏற்கனவே போலீஸ் விசாரணையில், இவர்கள் மூவரும் அளித்த வாக்குமூலம், போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. கஸ்டடி விசாரணையில் மேலும் ஏதாவது சொல்லப்போக, நிலைமை வில்லங்க மாகும் வாய்ப்புள்ளது. இதனால் போலீசார் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.