/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் வினியோகம் தாமதம் நல்லுார் பஞ்., மக்கள் அவதி குடிநீர் வினியோகம் தாமதம் நல்லுார் பஞ்., மக்கள் அவதி
குடிநீர் வினியோகம் தாமதம் நல்லுார் பஞ்., மக்கள் அவதி
குடிநீர் வினியோகம் தாமதம் நல்லுார் பஞ்., மக்கள் அவதி
குடிநீர் வினியோகம் தாமதம் நல்லுார் பஞ்., மக்கள் அவதி
ADDED : ஜூன் 13, 2025 01:24 AM
பவானிசாகர், பவானிசாகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பஞ்.,களுக்கு, தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் நடக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
இதனால் குழாய்களில் அழுத்தம் காரணமாக அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. இதனால் திட்டத்தின் கடைசி பஞ்சாயத்தாக உள்ள நல்லுாருக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறையே வினியோகிக்கின்றனர்.
இந்நிலையில் குடிநீர் வந்து, 15 நாட்களாகி விட்டதால், ௧ கி.மீ., தொலைவில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் பொது குடிநீர் குழாய்க்கு சென்று பெண்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.